März 28, 2025

இணைய பாலியல் சேவை:மருத்துவரும் சிக்கினார்!

இணையமூடாக சிறுமியை பாலியல் தேவைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னணி சிங்கள இருதய மருத்துவ சிகிக்சை நிபுணரும் கைதாகியுள்ளார்.

கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.