எழுவர் விடுதலை நிர்பந்திக்க முடியாது:பல்டியடித்த திமுக?
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவரை என திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை தற்போது குடியரசுத் தலைவர் கையில் உள்ள நிலையில், அவரை நிர்பந்திக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆட்சியில் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் பன்வாரிலால் உரிய முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் சிலர் சட்டச் சிக்கலை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்றும் தமிழக அரசு எந்த சட்டச் சிக்கலிலும் சிக்கிக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார்.