தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரின் அணுகுமுறைக்கான பலன்
வடக்கு கிழக்கில் வாழும் மக்களும் எமது மக்களே அவர்களுக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்படக்கூடாதென வணக்கத்திற்குரிய முறுத்தட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்
தமிழ்பேசும் மக்களை வேறுபடுத்தாது இலங்கையர் என்ற உணர்வுடன் பயணிக்கவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் விரும்புகின்றனர் என்றும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என்னைச்சந்தித்தபோது தமிழ் மக்களின் குறைபாடுகளை நீக்கி சகலரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்பவேண்டுமென்று தாம் விரும்புவதாக குறிப்பிட்டார் அனைத்து இன தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டை முன்னேற்றவேண்டும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ் முஸ்லிம் தலைவர்கள் விருப்பத்தோடு உள்ளனர் ஆனால் இனவாத அரசியல் கொள்கையோடு அதனை செய்யமுடியாது அதிகாரங்கள் குவிந்திருக்கும் ஒரு ஜனாதிபதியின் ஆட்சிக்குகீழிருந்து அதனை நடைமுறைப்படுத்த முடியாது ஒரு நபருக்கு நிறைவேற்று அதிகாரத்தை கொடுத்தால் நாடு நாசமாகும் என்பதையும் ஒரு குடும்பத்திடம் நாட்டை ஆழும் அதிகாரத்தை கொடுத்தால் நாடு என்னவாகும் என்பதையும் நாம் இன்று காண்கிறோம் என்றும் அனைத்து இன மக்களும் தங்கள் உரிமையோடு வாழும் வாழ்வை உருவாக்க நாம் உழைக்கவேண்டுமெனவும் தேரர் கூறியுள்ளார்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை எதிர்ப்பதன்மூலம் இருபதாம் திருத்தச்சட்டத்தையும்
,ஒரு குடும்பம் நாட்டை ஆழ்வதையும் நீதியற்ற இந்த ஆட்சியையும் சிங்கள மக்களும் அவர்களின் மதத்தலைவர்களும் இன்று வெறுக்கின்றனர் தமிழ் மக்களுக்கு பிரச்சினை உள்ளது என்பதனை ஏற்றுக்கொள்கின்றனர் ஆனால் அரசிற்கு ஆதரவான தமிழ்கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் தமிழருக்கு பிரச்சினையே இல்லை அவர்களுக்கு கொங்கிறீட் வீதியும் ஆடும் அடிக்கல்லும் அரைகுறை வேலைவாய்ப்பும் மாட்டுச்சாணியும் சருகும் குப்பையும் மண்தோண்டிய மடுவும் போதும் அதனை இந்த ஆட்சி சிறப்பாக செய்கிறது என்று அரசையும் இந்த ஆட்சியையும் பெரிதும் போற்றுகின்றனர் பறவாயில்லை நீங்கள் வாழ்ந்துவிட்டுப்போங்கள் உங்களைவிட எங்களுக்கென்று தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கிறது அவற்றை தீர்த்து நாமும் நமது சந்ததிகளும் நிம்மதியாகவும் அச்சமின்றியும் அடக்குமுறையின்றியும் அனைவரையும்போல வாழவேண்டுமென்று விரும்பும் மக்கள் அதிகம் இருக்கிறோம் அதற்காக உழைக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டிய கடப்பாட்டோடு இருக்கிறோம்
Like
Comment
Share