ஜப்பானில் வாழும் இலங்கை புலம்பெயர்ந்தோர் சமூகம் இலங்கைக்கு 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!


கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான இந்த தீவிர சிகிச்சை உபகரணங்கள் நாட்டில் உள்ள 14 பொது மருத்துவமனைகளுக்கு நன்கொடைகளாக அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு இந்த உதவியை அளித்துள்ள ஜப்பானிய புலம்பெயர்ந்த மக்களுக்கும், இந்த உதவியை ஒருங்கிணைத்து, அவை வந்து சேருவதனையும் அனுசரணை செய்த – ஜப்பானிற்கான இலங்கை தூதரக பணிக்குழாமிற்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Like
Comment