மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு தொடரும் அடி!
அரச எடுபிடியாகியுள்ள இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக தெற்கில் பலதரப்புக்களும் கடும் கண்டனம் வெளியிட்டுவருகின்றன.
அதிலும் சுகாதார அமைச்சரை காலில் போட்டு மிதித்து மருத்துவ அதிகாரிகள்
சங்க தலைவர் இருப்பது போன்ற கேலிச்சித்திரங்கள் தெற்கில் முளைக்க தொடங்கியுள்ளது.
இதனிடையெ கொரோனா தொற்று உறுதியானவர்கள் தொடர்பிலான தகவல்களை மறைக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
டெல்டா திரிபுடனான தொற்று உறுதியானவர்கள் இனங்காணப்பட்ட இடங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இடங்கள் தொடர்பில் மாற்று நடவடிக்கை எடுக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசுடன் இணைந்து மருத்துவ அதிகாரிகள் சங்கம் டெல்டா தொற்றினை மறைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.