எரிபொருள் கடத்தலில் இலங்கை காவல்துறை!
இலங்கையில் எரிபொருள் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எரிபொருள் மோசடி ஒன்றை கண்டுபிடித்து நேற்று செய்தி அறிக்கையில் வெளியிட்டது. இதில் ஒரு குழுவினர் பொலிஸ் பேருந்துகளில் இருந்து எரிபொருளை எடுத்து தனியார் பேருந்து செலுத்துனர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபரும் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த மோசடியில் பொலிஸ் பேருந்துகளின் ஓட்டுநர்களாக இருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் எரிபொருள் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக்கு உதவியதற்காக நாயபெத்த பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.