ஈராக் சிரியாவில் உள்ள ஈரான் சார்பு ஆயுத குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்!
ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஈரான் சார்பு ஆயுதக்குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க படையினரின் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கான பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றது என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் ஈரான் சார்பு ஆயுதக்குழுவினரின் நடவடிக்கைகளிற்கான தளங்கள் மற்றும் ஆயுத களஞ்சியங்கள் இலக்குவைக்கப்பட்டன என தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் இரண்டு இலக்குகளும் ஈராக்கில் ஒரு இலக்கும் தாக்கப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
ஈரான் சார்பு அமைப்புகளான கட்டைப் ஹெஸ்புல்லா ௲ கட்டைப் அல் சுகாதா ஆகியவற்றின் இலக்குகளே தாக்கப்பட்டன என பென்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தற்பாதுகாப்பு நோக்கத்திலேயே இந்த தாக்குதலை மேற்கொண்டது- வன்முறைகள் அதிகரிப்பதை தடுப்பதற்கான அவசியமான பொருத்தமான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தது என பென்டகன் தெரிவித்துள்ளது.
தெளிவானசந்தேகத்திற்கு இடமற்ற செய்தியை ஈரான் சார்பு ஆயுத குழுக்களிற்கு தெரிவிப்பது இதன் நோக்கம் எனவும் பென்டகன் தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகள் காயங்கள் குறித்து பென்டகன் எதனையும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க படையினரை பாதுகாப்பது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் தெளிவாக உள்ளார் எனவும் பென்டகன் தெரிவித்துள்ளது.
இதேவேளைஇந்த தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என சிரியாவின் மனித உரிமை நிலவரங்களை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
1