November 21, 2024

டக்ளஸ் மாமா பாணியில் அங்கயன் மாமா!

டக்ளஸ் பாணி மாமா அரசியலில் மும்முரமாக களமிறங்கியுள்ளார் அரச நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன்.

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள், தாய் மற்றும் குடும்பத்தினரை, அழைத்துவந்து அமைச்சர் நாமல் ராஜபக்சவை சந்திக்க வைத்திருந்தார் நாமல் ராஜபக்ச.

ஏற்கனவே யாழ்ப்பாணம் வரும் நாமலிற்கு சலூட் அடிக்க கடந்த 24ம் திகதி விடுதலை செய்யபட்ட கைதிகளினை நிர்ப்பந்திப்பதாக பதிவு ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர், தமது நன்றியை அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களுக்கும், தமது விடுதலையை சாத்தியப்படுத்திய அரசாங்கத்துக்கும் தெரிவித்ததோடு, மிகுதி கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அமைச்சரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய கவனம் எடுப்பதாக இதன்போது அமைச்சர், உறவுகளிடம் தெரிவித்ததாக அங்கயன் தெரிவித்துள்ளார்.