இலங்கை சோற்றிலும் கைவைத்த சேர்?
இலங்கையில் அரிசி பற்றாக்குறை உச்சமடைந்துள்ள நிலையில் ஒரு மாத கால பயன்பாட்டிற்கான அரிசியே கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரிசி விலையை தீர்மானிக்கும் மாபியாக்களை கட்டுப்படுத்த போவதாக கூறி அரிசி இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் தற்போது சுமார் ஒரு மாத கால நுகர்வுக்கு மட்டுமே அரிசி இருப்பு உள்ளது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆலை உரிமையாளர்கள் வழங்கிய புள்ளிவிவரங்களுடன், எதிர்வரும் நாட்களில் நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
எனவே, உடனடியாக 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.