November 21, 2024

ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தபால் பொதிகளுக்கான வரி விதிப்பு கொள்கையில் மாற்றம்..!

ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தபால் பொதிகளுக்கான வரி விதிப்பு கொள்கையில் மாற்றம்..!

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தபால் பொதிகளுக்கான வரி விதிப்பு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக இலங்கை அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தபால் பொதிகளுக்கு வற் வரி மற்றும் ஏனைய சுங்க வரிகள் அறவிடப்படும் என அஞ்சல் திணைக்களம் கூறியுள்ளது.

இதற்கு அமை 150 யூரோக்களை விட குறைந்த பெறுமதி கொண்ட அனைத்து தபால் பொதிகளுக்கும், அதனை அனுப்பும் நபர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நேரடியாக வற் வரியை செலுத்த வேண்டும்.

தபால் ஊடாக இலங்கையில் வசிக்கும் நபர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் நபருக்கு பரிசு பொருட்கள் அடங்கிய தபால் பொதியை அனுப்பினால், இந்த வற் வரியை இலங்கையில் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒஸ்ரியா, பல்கேரியா, சைப்ரஸட், டென்மார்க், பின்லாந்து, ஜேர்மனி, ஹங்கேரி, இத்தலி, லித்துவேனியா, மோல்டா, பெல்ஜியம், குரேசியா, செக் குடியரசு, எஸ்தோனியா, பிரான்ஸ், கிறீஸ், அயர்லாந்து, லித்வியா, லக்சம்பேர்க், நெதர்லாந்து, போலாந்து, போத்துக்கல், ருமேனியா, ஸ்லோவேக்கியா, ஸ்பெயின், சுவீடன் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.