März 28, 2025

ரணிலை தொடர்ந்து பஸிலும் வருகிறார்?

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வார் என தெரியவருகிறது.

அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ச நேற்று நாடு திரும்பினார். தற்போது சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும், இணையம் ஊடாக முக்கிய சந்திப்புகளை கட்சி செயற்பாட்டாளர்களுடன் அவர் நடத்திவருகின்றார்.

இதன்போது நாடாளுமன்ற பிரவேசம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. இதன்படி பசில் 6 ஆம் திகதி பதவியேற்க வேண்டும் என அவருக்கு நெருக்கமானவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னரே பசில் நாடாளுமன்றம் வரவேண்டும் என மேலும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக தேசியப்பட்டியல் எம்.பியொருவர் பதவி துறக்கவுள்ளார், சபைக்கு வரும் பஸிலுக்கு பொருளாதார விவகார அமைச்சு வழங்கப்படவுள்ளது.