November 21, 2024

ஆடு நனையுது என்று ஓநாய் அழுதீச்சாம். இந்த பழமொழி பலரும் அறிந்ததே. இப்ப சிலருக்கு திடிர் ஞான உதயம் வந்திருக்கு.

(பலரது மனநிலையும் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் அவர்கள் குடும்பத்தினர் உடனான சகவாழ்வு.)
நாமல் ராஜபக்ச அவர்களின் கருத்தை வரவேற்கின்றேன். அதே வேளை கஜேந்திரகுமார் சொல்றதிலும்
உண்மை இருக்கு.
உண்மையா சொல்ல போனால் இவங்க தமிழ் கைதில பரிதாபப்பட்டோ இல்ல மனசு இரங்கியோ விடுதலை பண்றத பற்றி கதைக்கல. Europe Union மனித உரிமைகள் மற்றும் PTA காரணம் காட்டி GSP+ வரிச்சலுகைய ரத்து செய்ய யோசிச்சு இருக்கு. அப்படி நடந்தா அது இலங்கை அரசுக்கு பெரிய அடி. (இலங்கைக்கு வருமானம் tourism and export of clothes and other material to Europe. ) கடந்த இரு வருடமா Tourism இல்லை. இப்ப GSP+ இல்லாம போன நாட்டின் முக்கிய வருமானமான ஆடை மற்றும் வேறு ஏற்றுமதி மிக பதிப்படையும். (ஆடை உற்பத்தி முதலிடம் சீனா, 2வது பங்களாதேஷ். எனவே இப்போட்டியில் சீனா என்ன செய்யும் என ஊகிக்கவும்). எனவே தான் இந்த நாடகம்.
இப்ப விடுற மாதிரி விட்டு பிறகு பிடிக்கமாட்டாங்க என்று என்ன நிச்சயம். அதனால் தான் அதற்கு வழியா இருக்க PTA இல்லாம செய்யவும் அது போன்று வேறு சட்டம் உருவாகம இருக்க சொல்கின்றார் கஜேந்திரகுமார்.
முக்கிய விடயம். அரசியல் கைதி விடுதலை இன்று நேற்று இல்லை, பலகாலமா நாடளுமன்றில் விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழ் பாராளுமன்ற உருப்பினர்களை „கொட்டிய = புலி“ என கூறினார்கள். யாழ் பல்கலைகழக மாணவர்கள், அரசியல் கைதி பற்றிய ஆர்ப்பாட்டத்தில் கூட இவ்வாறே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது (மகிந்த அரசால்). இன்று இவர்கள் நடிப்பது EUக்காக.
இப்படியான ஒரு நிலையை சாமளிக்கவே போன கிழமை தமிழ்கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டது. பின் தெற்கின் அழுத்தம் காரணமாக கைவிடப்பட்டது.
இறுதியாக கூற வருவது. மீண்டும் மீண்டும் ஏமாறாது. நிரந்த நீதியை இச்சாதக நிலையில் பெற அனைத்து தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர வேண்டும். ( PTA நீக்கம் தேவையான ஒன்று )
Vaiththilingam Rajanikanthan, Antony Raveendran and 31 others
3 Comments
3 Shares
Like

Comment
Share