அமெரிக்க பல்கலைக்கழக தலைவராகும் தமிழர்!
அமெரிக்காவின் சிகாகோவில் உள்ளது இல்லினாய்ஸ் தொழில்நுட்ப பழ்கலைகழகம்.131 ஆண்டுகள் பழமைவாந்த இந்த பல்கலைகழத்தின் தொழில்நுட்ப மையத்தில் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ராஜகோபால் ஈசம்பாடி நியமனம் செய்யப்பட்டுள்ளர்.
இந்திய வம்சாவளி ஒருவர் பல்கலைக்கழகத்தின் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இவர் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி பதவியேற்று கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜகோபால் ஈசம்பாடி, தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தவர், சென்னை திநகரில் உள்ள வேளாங்கண்ணி உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
இதனைதொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைகழகத்தில், இளநிலை பொறியியல் மற்றும் எம்.பி.ஏ படிப்பை முடித்தார்.
பின்னர் டாபே மற்றும் காஸ்ட்ரோல் நிறுவனங்களில் பணியாற்றிய அவருக்கு, திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் தொழில்முனைவோர் மையங்களையும் ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு பிஎச்டி படிக்க அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைகழகத்திற்கு வந்த இவர், அதன்பின் அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார்.
தற்போது, போஸ்டானில் உள்ள வடகிழக்கு பல்கலைகழகத்தில் வணிகத்துறையில் டீனாக பணியாற்றிவரும் ராஜகோபால் இல்லினாய்ஸ் தொழில்நுட்ப மையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.