November 22, 2024

நாமல் பேச்சளவில் வேண்டாம்!

இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் அரச அமைச்சரான நாமல் ராஜபக்ஸ தெரிவித்த கருத்துக்களிற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு வரவேற்பை தெரிவித்துள்ளது.

அரசினது அமைச்சரது கருத்து கண்டுகொள்ளப்படாதிருக்கும் அரசியல் கைதிகளது விடுதலைக்கான நம்பிக்கையினை தருவதாகவும் ஆனால் வெறும் பேச்சினை தாண்டி செயற்படுவதாக அமையவேண்டுமெனவும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதற்கான யோசனை  அமைச்சரினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் பலர் இன்றும் சிறைகளில் உள்ளனர். வழக்கு விசாரணைகளின் பின் 35 பேரே தண்டனை பெற்று தொடர்ந்தும் சிறையில் இருப்பதோடு அவர்கள் பெற்ற தண்டனைக் காலத்திற்கும் மேலதிகமாகவே தண்டனை கிடைக்கும் முன்னர் சிறையில் களித்துவிட்டனர். அத்துடன் 20 வருடங்களுக்கும் மேலதிகமாக சிலர் தடுப்பில உள்ளனர். எந்த வழக்கும் தொடரப்படாத நிலையில் 13 பேர் உள்ளனர். வழக்கு விசாரணை நிறைவுபெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத 116 பேர் உள்ளனர். அவ்வாறு பல இளைஞர்கள் சிறைகளில் உள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிவுறுத்த வேண்டும். அல்லது விடுவிக்கப்பட வேண்டுமென நாமல் வலியுறுத்தியுள்ளார்.