März 29, 2025

அம்பாறையில் வயல்வெளியில் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் இருந்து நேற்று (21) மாலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதுசடலம் நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள வயல் காணியில் மீட்கப்பட்டுள்ளதுடன் இறைச்சி கடை சார்ந்த கூலித் தொழிலில் ஈடுபட்டு வரும் 60 வயதான உபாலி என அறியப்படும் ஜாபீர் என்பவரே உயிரிழந்தவராவார்.

சடலமாக மீட்கப்பட்டவர் போதைப்பொருள் பாவனை பழக்கம் உள்ள இவர் கடந்த காலங்களிலும் இவ்வாறு போதைப்பொருள் மூலம் நிதானமிழந்து வீதிகளில் விழுந்து கிடந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.