März 29, 2025

வியாழேந்திரனுக்கு எதிராகப் போராட்டம்! உருவப் படமும் எரிப்பு!

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக நேற்றிரவு (21) பொதுமக்கள்  எதிர்ப்பு நடவடிக்கையொன்றை  மேற்கொண்டனர்.இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, மக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் உருவப் படங்களை தீயிட்டு எரித்து, பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதையடுத்து அப்பகுதியின் பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது.