இன்றைய பூகோள நெருக்கடி (GSP+)சிங்கள ஆட்சியாளர்களை பல்வேறு விதமாக சிந்திக்க விட்டிருக்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டம் யோசிக்க வைத்திருக்கின்றது.
சட்டம் ஒரு கழுதை என மேதைகள் சொல்வதுண்டு. சட்டமாக்கிய பின் அது உன்னையும் உதைக்கும் என்பதே அதன் அர்த்தம்.
இன்று பயங்கரவாத தடைச்சட்டம் ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களை பலமாக உதைக்கின்றது. அதனால் நீலி கண்ணீர் வடிக்கின்றனர்.
12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்திய உங்களால் சில நூறு போராளிகள், சில நூறு சந்தேக நபர்களை ( அப்பாவிகள்) விடுவிக்க முடியவில்லை என்றால் என்ன காரணம்?
இன்று நோயையும் சொல்லி மருந்தையும் சொல்ல வேண்டிய நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளது.
சிங்களவர்களுக்கிடையிலான அதிகார போட்டி தங்கள் பிழைகளை தாங்களே கூறவேண்டிய நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது.
தன்னை தற்கொலை செய்ய வந்த போராளியுடன் பொன்சேகா தொலைபேசியில் உரிமையுடன் பேசும் நிலையில் உள்ளார். இதற்கு என்ன காரணம்?
பொன்சேகாவின் சிறை வாழ்க்கை அவருக்கு மனிதத்தை கற்று கொடுத்திருக்கிறது. அவர் போன்றோரை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றார்.
நாமலுக்கும் சிறை வாழ்க்கையே ஒரு நல்ல பாடத்தை வழங்கியது. தன்னோடு சிறையில் ஒன்றாக இருந்த போராளிக்கு தான் வெளியே வந்ததும் நாமல் செய்த நல்ல வேலை அந்த போராளியின் குடும்பத்திற்கு கனகாம்பிகைகுளத்தில் வீடு ஒன்றை கட்டி கொடுத்தது.
இன்று சிங்கள ஆட்சியாளர்களே உணரும் நிலைக்கு களநிலை சூடுபிடித்துள்ளது.
நாடு வங்ரோத்து அடைய அடைய யதார்த்தத்தை உணர தொடங்கியுள்ளனர்.
விடுதலைப்புலிகளுடன் போரிட்டதை விட நாட்டை அபிவிருத்தி செய்வது கஸ்ரம் என்பதை உணர்கின்றனர்.தமிழ் இனத்தை ஒதுக்கி வைத்ததன் அடிப்படையை விளங்க முற்படுகின்றனர்.
ஆனால் இதையே அமெரிக்க ,இந்திய வால்பிடி சஜீத்தை ஜனாதிபதியாக்கி இருந்தால்?
தமிழ் மக்கள் பூகோள அரசியல் நிலைகளை கவனிக்க தவறுகின்றனர். போரிட்டதை விட இன்று ஶ்ரீலங்கா அரசு கடினமான நெருக்கடியில் உண்டு என்பதை விளங்கி கொள்ளுங்கள்.
அன்று தமிழர்களின் மீது குண்டுகளை கொட்ட உதவி செய்த அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகள் இன்று என்ன செய்கின்றன? யுத்தத்திற்கு கொடுத்த பணத்தில் பாதியை சரி கொடுக்கலாமே?
சிம்பிளாக சிந்தித்து பாருங்கள். பூகோள அரசியல் புலப்படும்.
4
1 Share
Like
Comment
Share