November 22, 2024

கோத்தா சுயபொருளாதாரம்:அரிசிக்கும் ,சீனிக்கும் பஞ்சம்!

சுயபொருளாதாரமென புறப்பட்ட கோத்தபாய அத்தியாவசிய உணவுகளின் தட்டுப்பாட்டை நிறுத்த முடியாது திண்டாட தொடங்கியுள்ளார்.

இலங்கை முழுவதும் சீனியை  பதுக்கி வைத்திருக்கும் வணிக நிலையங்களைக்  கண்டுபிடிப்பதற்கான சோதனைகளைத் தொடங்கவுள்ளதாக   நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே உள்ளூர் சந்தையில் அரிசியின் விலைகளைக் குறைப்பதற்கான ஒரே தீர்வாக 100,000 தொன் அரிசியை இறக்குமதி செய்வுள்ளதாக வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்த்தன

தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை ஒப்புதல் இன்று பெறப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உள்ளூர் சந்தையில் அரிசி விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ  சம்பாவின்  விலை ரூ .140  ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இறக்குமதி செய்தவுடன், ஒரு கிலோ ரூ .100 க்கும் குறைவாக சந்தையில் விற்கலாம். பின்னர்,ஆலை உரிமையாளர்களின் விலையை குறைக்க நாம்  நடவடிக்கை எடுக்கலாம் அதுதான் ஒரே தீர்வு என தெரிவித்துள்ளார்.