ஆட்களை மாற்றி கொரோனாவை தடுக்க முயற்சியாம்!
இலங்கையில் ஆட்களை மாற்றியமைப்பதன் மூலம் கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை மூடி மறைக்க ஆட்சியாளர்கள் முற்பட்டுள்ளனர்.
தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக சுதத் சமரவீர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தொற்றுநோயியல் பிரிவின் பதில் பணிப்பாளராக வைத்தியர் சமித கினிகே நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.