இனப்படுகொலை ஆதார நிழல்படக் காட்சிப்படுத்தலும் ஒன்றுகூடலும்.
சிறீவங்காஅரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை ஆதார நிழல்படக் காட்சிப்படுத்தலும் ஒன்றுகூடலும்
கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் இனப்படுகொலைக்கான நிழற்பட ஆதாரக் காட்சிப்படுதலும் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களினால் கிழமை நாட்களில் மாநகரசபை முன்பாகவும் புதன்கிழமைகளில் பாராளுமன்றத்திற்கு முன்பாக தொடர்ந்து நடாத்தப்படுகிறது
இனப்படுகொலை செய்த ஸ்ரீலங்கா அரசை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும். பிரான்சு நாட்டில் உள்ள நகரசபைகள் பிரான்சு அரசிடம் இதை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் இனப்படுகொலைக்கான நிழற்பட காட்சிப்படுதலும் பாரிசு நகரிலும் அதனை அண்மித்த நகரங்களிலும் நடைபெற்று வருகின்றது.
இதனிடையே பிரான்சு புறநகர் பகுதியான லீல் சென் டெனி (L’Île-Saint-Denis) நகரசபை முன்றலில் 18/06/2021 அன்று கவனயீர்ப்பு. ஒன்றுகூடலும் இனப்படுகொலைக்கான நிழற்பட காட்சிப்படுதலும் நடைபெற்றது.
இதன்போது நகரசபையின் முதல்வர் அவர்களுடன் சந்திப்பு இடம் பெற்று கோரிக்கையடங்கிய மனுவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது,