நாடு நாடாக கடன்வாங்கும் இலங்கை!
சீனாவை தொடர்ந்து இலங்கை மற்றொரு கடனை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறவுள்ளது. இதன்படி 400 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ .8000 கோடி) பரிவர்த்தனை கடனைப் (exchange loan) பெற இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சார்க் நாடுகளுக்கான SWAP ஒப்பந்தம் 2020 ஆம் ஆண்டில் இலங்கையால் கையெழுத்திடப்பட்டது. முதல் கடன் இந்த ஆண்டு பெப்ரவரியில் திருப்பிச் செலுத்தப்பட்டது. எனவே, அடுத்த கடன் இந்த ஆண்டு ஆகஸ்டில் கிடைக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.