März 28, 2025

ஊர்காவற்துறையில் உயிரிழந்த திமிங்கலம்!

ஊர்காவற்றுறை சுருவில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய திமிங்கலம் கரையொதுங்கியுள்ளது.

ஊர்காவற்றுறை சுரவில் கடற்கரையில்  30 அடி நீளமுள்ள சுமார் 2000 கிலோ எடையுள்ள திமிங்கலம் கரையொதிங்கியுள்ளது.

குறித்த திமிங்கலம் சில வாரங்களுக்கு முன்னர் குறித்த  பகுதியில் உயிருடன் கரையொதிங்கிய நிலையில் மீனவர்களால் மீட்டு நடுக்கடலில் விடப்பட்ட நிலையில் மீண்டும் இன்று காலை இறந்த நிலையில் கரையொதிங்கியுள்ளது.

எனினும் இன்று மாலை உயிரிழந்த திமிங்கலம் வெட்டி மீனவர்களால் புதைக்கப்பட்டுள்ளது.