நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன்.நடிகர் மணிவண்ணன்
நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன்.
தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன். என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடி வருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக்கூடாது.
என் உடம்பை சீமானிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும்.
என் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை’’
–மணிவண்ணன்