November 22, 2024

மதம் தாண்டி கொரோனா கால உதவி:குவியும் பாராட்டுக்கள்!

 

இலங்கை அரசின் முடக்க அறிவிப்பு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுவரும் நிலையில் அடித்தட்டு நிலையிலுள்ள மக்களது நிலை தொடர்ந்தும் நெருக்கடியாகவே இருந்துவருகின்றது.

ஒருபுறம் தன்னார்வத் தொண்டர்களுக்கு தடை போடுவதில் அதிகாரிகள் முனைப்பு காட்டிவருவதான குற்றச்சாட்டுக்களில் புலம்பெயர் இந்து ஆலயங்கள் முன்மாதிரியாக மத பிளவுகளை தாண்டி யுத்த கால அனுபவங்களுடன் முனைப்பாக உதவிகளை வழங்கிவருகின்றன.

இந்நிலையில் சுவிஸ் சூரிச் அன்பேசிவம் அமைப்பு தனது உதவி பணிகளை வடக்கின் அனைத்து மாவட்டங்களிற்கும் விஸ்தரித்துள்ளது.

இடர்காலத்தில் முன்னெடுக்கும் „யாவர்கும் ஆம் உண்ணும்போது ஓர் கை பிடி“ எனும் திட்டத்தின் கீழ் சைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஊடாக  குடும்பகளிற்கான உலர் உணவு பொதிகள் நாள் தோறும் வழங்கப்பட்டுவருகின்றது.

தேவைகளை அடையாளப்படுத்த உள்ளுர் நிர்வாக அதிகாரிகளை பயன்படுத்தும் சைவத் தமிழ்ச் சங்கம் உள்ளுர் பணியாளர்கள் இதன் மூலம் தேவை உள்ளவர்களை அடையாளங்காண முடிவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மதம் தாண்டிய உதவிகள் அனைத்து தரப்பிடையேயும் மதிப்பினை ஏற்படுத்தியுமுள்ளது.