தமிழர் கண்டுபிடிப்புக்களால் திணறும் இலங்கை காவல்துறை!
வடகிழக்கில் பயண கட்டுப்பாட்டின் மத்தியில் புதிய புதிய கண்டுபிடிப்புக்களை செய்து அசத்திக்கொண்டிருக்கின்றனர் பொதுமகன்கள்.
இன்றைய தினம் பொழுது போக்க பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடமிருந்து 415,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்னொருபுறம் சாராயக்கடைகள் மூடப்பட்டு;ள்ளதனையடுத்து சமையலறைகளில் சுய முயற்சியில் மதுபான உற்பத்தியில் இன்னும் சிலர் குதித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ,வன்னியென வேறுபாடுகள் இன்றி தமது சுயபொருளாதார மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள குடிமகன்களை கசிப்பு காய்ச்சுவோரென சமூகம் நையாண்டி செய்வதை கவலையுடன் பகிர்ந்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.
ஆவி ஆகிற நீராவி(சாராயம் அல்லது கசிப்பு) இடைவெளி ஊடே செல்லாமல் இருக்க களிமன் கொண்டு அடைப்பார்கள். சட்டியில் உள்ள நீர்தான் சாராயம் அல்லது கசிப்பு ஒடுங்குதலுக்கு பயன்படும். பானையில் காச்சுபவர்கள் மூன்று அடுக்கு பானையை பயன்படுத்துவார்கள் மேல் பானையில் உள்ள நீர் நடுப்பானையில் சாராயம் ஒடுங்க பயன்படும் என அதற்கு பாராட்டி விளக்கமும் தந்துள்ளார் ஒருவர்.