தளர்த்தினாலும் நிபந்தனைகளுடனேயே அனுமதி!
இலங்கையில் பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் நடமாட்டக்கட்டுபாடுகளை அமுல்ப்படுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொரோனா தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களுடன இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் பயணத்தடை தளர்த்தபபட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுபாட்டினை தொடர்வது குறித்தும், திருமண நிகழ்வுகள், ஒன்றுகூடல்கள், களியாட்ட நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு தடைவிதிப்பது தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 14 ஆம் திகதி பயணத்தடை நீக்கப்படுமாயின் தனியார் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்
இதேவேளை ரயில்சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் என ரயில்வே திரணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார்