டிக்-டாக் செயலிக்கு தடை!! முடிவை கைவிட்டது அமெரிக்கா
டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முடிவை ஜோ பைடன் நிர்வாகம் தற்போது கைவிட்டு விட்டது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக ஆணைகளை அதிபர் ஜோ பைடன் இரத்துசெய்திருக்கிறார்.சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் அமெரிக்க கோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளன நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.