சூரிய கிரகணம் ஜூன் 10, 2021 …
2021 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2021 ஜூன் 10ம் தேதி(வியாழன்) அன்று நிகழவுள்ளது.
இந்தியாவில் இது காலை 8:12 மணிமுதல் பகல் 1.42 மணி வரை என ஐந்தரை மணி நேரம் நீடிக்கிறது.
எங்கெல்லாம் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்?
இந்தியா உள்ளிட்ட ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும்.
ரஷ்யாவின் சில பகுதிகள், கிரீன்லாந்து மற்றும் வடக்கு கனடாவின் பகுதிகள். மேலும், வட ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஒரு சில பகுதி கிரகணத்தைக் காண இயலும். இருப்பினும், ஐரோப்பாவின் பகுதிகளிலும், ஆசியாவின் பகுதிகளிலும், வடக்கு / மேற்கு ஆபிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும் பகுதிகளிலும், அட்லாண்டிக், ஆர்க்டிக் ஆகிய இடங்களில் ஒருசில இடங்களில் இந்த கிரகணத்தைக் காண இயலும்.
சூரிய கிரகணத்தின் முக்கியத்துவம்
சூரியன் – சந்திரன் – பூமி ஒரே நேர்கோட்டின் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்குமிடையே சந்திரன் வரும்போது, சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படக்கூடிய நிகழ்வாகும்.
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன் மற்றும் பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் (Solar Eclipse) என்ற நிகழ்வு ஏற்படுகின்றது.
கிரகண சூட்சமம்:
பூமி மனித உடலையும், சந்திரன் மனமும், சூரியன் ஆத்மாவையும் குறிக்கும்.உடல், மனம், ஆன்மாவை ஒன்றிணைக்க செயற்கையாக ஆன்மிக பயிற்சி செய்து பெறக்கூடிய முறை யோகம் என்கிறோம். ஆனால் கிரகணத்தின் போது இயற்கையாகவே யோகம் பெற உந்துதலை ஏற்படுத்துகிறது.