வெண்வெளிக்குப் பயணிக்கவுள்ளார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்
புளூ ஆரிஜின்‘ நிறுவனத்தால் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள விண்கலத்தில், அமேசான்‘ நிறுவனர் ஜெப் பெசோஸ் பயணிக்க உள்ளார்.பிரபல தொழிலதிபரும், அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ், 57, புளூ ஆரிஜின் என்ற விண்வெளி ஏவுகணைகள் மற்றும் விண்கல தயாரிப்பு நிறுவனத்தை, 2000ல் துவங்கினார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் தலைமையகத்துடன் இயங்கி வரும் இந்த நிறுவனத்தை, அவர் நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, வரும் ஜூலை 5ம் தேதி அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பதவியில் இருந்து விலகப்போவதாக, ஜெப் பெசோஸ் சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், புளூ ஆரிஜின் நிறுவனத்தால், அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள விண்கலத்தில், ஜெப் பெசோஸ் பயணிக்க உள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, தன், ‚இன்ஸ்டாகிராம்‘ பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
புளூ ஆரிஜின் நிறுவனம், ஜூலை 20ம் தேதி விண்ணில் செலுத்த உள்ள, ‚நியூ ஷெப்பர்ட்‘ விண்கலத்தில், நானும், என் சகோதரர் மார்க் பெசோசும் பயணித்து விண்வெளிக்கு செல்ல உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.