November 21, 2024

நிதி மோசடி!! மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை!!

மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தியான ஆஷிஷ் லதா ராம்கோபின் (Ashish Lata Ramgobin), பிரபல மனித உரிமை ஆர்வலர் எலா காந்தி மற்றும் மேவா ராம்கோபிந்த் ஆகியோரின் மகள் ஆவார். இவர் தெனாப்பிரிக்காவில் வசித்து வருகிறார்.இந்நிலையில் லதா ராம்கோபினுக்கு எதிரான வழக்கு 2015 ஆம் ஆண்டு போடப்பட்டது. இந்தியாவில் இருந்து சணல், காலணி, துணி ஆகியவற்றை இறக்குமதி செய்வதாகவும் அந்த ஆர்டருக்கான இறக்குமதி மற்றும் சுங்க வரி செலுத்த, தன்னிடம் பணம் இல்லை கூறி 6.2 மில்லியன் ராண்ட் கடனாக வேண்டும் எனவும் New Africa Alliance Footwear Distributors என்ற நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றுள்ளார். உண்மையில், அவர் செய்யப்பட்டாத இறக்குமதிக்காக பொய்யான ஆவணங்களை சமர்பித்துள்ளார்.

லதா ராம்கோபின் மீதான நன்மதிப்பு காரணமாகவும், அவர் சமூக செயற்பாட்டாளர் என்பதாலும், தொழிலதிபர் மகாராஜ்,  நம்பிக்கை வைத்து அவருக்கு 6.2 மில்லியன் ராண்டை கடனாக அளித்திருக்கிறார்.

ஆனால் சிறிது நாட்களிலிலேயே, லதா தன்னிடம் காட்டிய அனைத்து ஆவணங்களும் போலியானது என்பதும், அவர் மோசடி செய்திருக்கிறார் என்பதையும் அறிந்த தொழில் அதிபர் மகாராஷ், லதா மீது புகார் அளித்து வழக்கு தொடுத்திருக்கிறார்.

இந்த வழக்கின் மீதான விசாரணையில், டர்பனில் உள்ள ஒரு தென்னாப்பிரிக்க நீதிமன்றம், மகாத்மா காந்தியின் பேத்திக்கு, 60 லட்சம் ரேண்ட் (rand-தென் ஆப்பிரிக்கா நாணயம்) மோசடி வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. சுமார், 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் திங்களன்று, மாகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தியான ஆஷிஷ் லதா ராம்கோபின் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அகிம்சைக்கான சர்வதேச மையத்தின் பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான ராம்கோபின் தன்னை „சுற்றுச்சூழல், சமூக மற்றும் அரசியல் நலன்களை காக்கும் ஆர்வலர்“ என்ற அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள மகாத்மா காந்தியின் பிற சந்ததியினர் மனித உரிமைகள் செயல்பாட்டில் பல ஆண்டுகளாக தங்கள் முயற்சிகளுக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளனர். அவர்களில் கீர்த்தி மேனன், சதீஷ் துபேலியா மற்றும் உமா துபேலியா-மெஸ்திரி ஆகியோர் அடங்குவர்.

குறிப்பாக எலா காந்தியின் சமூக நலன் முயற்சிகளுக்காக இந்தியா விருதுகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  இவருக்கு சர்வதேச அளவிலும் விருது வழங்கப்பட்டுள்ளது.