Mai 13, 2025

பழக்கதோசம் :கல்லா கட்டிய விமாப்படையினர் அகப்பட்டனர்!

முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை மிரட்டி அவர்களிடமிருந்து ஒரு இலட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையிட்ட இலங்கை விமான படையை

சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கற்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை இடைமறித்த விமான படையை சேர்ந்த மூவர் , அவர்கள் இருவரையும் மிரட்டி அவர்களிடமிருந்த ஒரு இலட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர்.

தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.