சிறீ லங்கா விற்பனைக்கு…
இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது .
குறிப்பாக இலங்கையின் வெளிநாட்டு கடன் மட்டும் $ 70 billion என்கிற நிலையை எட்டி விட்டது.
அதே போல சர்வதேச கடன் மதிப்பிட்டு நிறுவனங்கள் கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மதிப்பீடு செய்து இருப்பதால் மேலதிக கடன்களை பெற்றுக்கொள்ளுவதிலும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன.
இது தவிர, மத்திய வங்கி மோசடியில் இழக்கப்பட்ட $ 268 million , Greek junk bonds முதலீடுகளில் ஏற்பட்ட $6.6 million நட்டம்,
MIG மிகையொலி விமான கொள்வனவு ஊழல் $6 million, சீனி கொள்வனவு மோசடியால் ஏற்பட்ட இழப்பு $ 83 million,
BMW கார் இறக்குமதி வரி மோசடி $ 84 million என வரையற்ற ஊழல் மோசடிகளால் இலங்கையின் நிதி நிலவரம் ஆபத்தான கட்டத்தை நெருங்கி இருக்கின்றது
இதுமட்டுமில்லாது அரசியல் நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் , சர்வதேச விமான நிலையம் போன்ற பாரிய முதலீடுகள் தோல்வியடைந்த நிலையில் இலங்கை அரசாங்கம் தனது வருமானத்தை விட ஆண்டு தோறும் மீள செலுத்த வேண்டிய கடன் அதிகரித்து இருக்கின்றது
இதன் பிண்ணனியில் Private Public Partnership (PPP) என்கிற திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்கள் , கட்டடங்கள் மற்றும் காணிகளை தனியாருக்கு விற்கும் நிலைப்பாட்டை கோட்டாபயா ராஜபக்சே நிருவாகம் எடுத்து இருக்கின்றது .
மேற்குறித்த கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்காக Selendiva Investments Limited என்கிற நிறுவனம் ஒன்றை உருவாக்கியுள்ள கோட்டாபய ராஜபக்சே நிருவாகம் மூன்று கட்டத்தின் கீழ் கொழும்பின் பெருமளவான பிரதேசத்தை விற்கும் தீர்மானத்தை எடுத்து இருக்கின்றது
அந்த வகையில் Colombo Fort Heritage Square என்கிற முதல் கட்டத்தின் கீழ்,
1. இலங்கை விமானப் படை தலைமையகம்
2. கொம்பனித் தெரு பொலிஸ், கொம்பனித் தெரு பொலிஸ் விளையாட்டு மைதானம், கொம்பனித் தெரு பொலிஸ் விடுதித் தொகுதி.
3. கொழும்பு விமானப் படை முகாம்
4. கொழும்பு விமானப் படை விளையாட்டு மைதானம் (Rifle Green Ground)
5. கொழும்பு சினமன் லேக் சைட்
6. கொழும்பு M.O.D. Cyber Operation Centre
7. இராணுவ தொலைத் தொடர்புகள் மற்றும் உபகரணங்கள் பொறியியல் ரெஜிமென்ட் தலைமையகம் ஆகிய பிரதேசங்கள் தனியார் மயப்படுத்த பட உள்ளன
அதே போல Immovable Property Development, என்கிற இரண்டாம் கட்டத்தின் கீழ்,
1. கிரேன்ட் ஒரியன்டல் கட்டிடம்
2. கபூர் கட்டிடம்
3. யோர்க் வீதியில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள்
4. வௌிவிவகார அமைச்சு கட்டிடம்
5. தபால் திணைக்கள தலைமையகம்
6. பொலிஸ் தலைமையகம்
7. செத்தம் வீதியில் அமைந்துள்ள FICD தலைமையக கட்டிடம் (தற்போது CHEC Port City (Pvt) Ltd என்ற சீன நிறுவனத்தின் பாவனையில் உள்ளது )
8. ஹில்டன் ஹோட்டல் மற்றும் வீடுகள்
9. ஹயாத் ஹோட்டல் மற்றும் வீடுகள்
10. வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் மற்றும் அதற்கு அருகில் உள்ள 200 ஏக்கர் காணி உட்பட்ட நிலப்பரப்பு தனியார் மயப்படுத்த அமைச்சரவை தீர்மானித்து இருக்கின்றது
அரசாங்கம் மேற்கூறிய இடங்களை தனியார்மயப்படுத்த தீர்மானித்து உள்ள நிலையில் பெருமளவான இடங்களை China Communications Construction Company (CCCC) என்கிற சீனா நிறுவனம் வாங்குவதற்கு முன்வந்து இருக்கின்றது .
ஆனால் இந்த நிறுவனம் அமெரிக்கா அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டு இருப்பதால் அவர்களது துணை நிறுவனமான CHEC Port City Colombo (PVT) LTD என்ற சீன நிறுவனத்தின் ஊடாக கொடுக்கல் வாங்கல்களை செய்ய முயற்சித்து வருகின்றார்கள்
இது தவிர , சீனா அரசின் உதவியுடன் கட்டப்பட்ட தாமரை கோபுரம நட்டம் அடைந்துள்ள நிலையில் மீண்டும் சீனா நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்க பட்டுள்ளது
இந்நிலையில் கொழும்பின் பெரும்பகுதி குறிப்பாக Colombo 1 and Colombo 2 ஆகியன சீனா நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால் இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக சீனா எதிர்வரும் பொதுத்தேர்தல் காலத்திற்கு முதல் உருவாகும்
படம் : இரண்டாம் கட்டத்தின் கீழ் விற்க பட உள்ள Hilton Hotel