இணையங்களை முடக்க திட்டமா?
நாமல் ராஜபக்ஸ வசம் சென்றுள்ள டிஜிற்றல் விவகார அமைச்சு தனது கைங்கரியத்தை ஆரம்பித்துள்ளது.
இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றும் நபர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஒருவர் பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கினால், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98 வது சரத்தின் கீழ் தண்டனை பெறக் கூடிய குற்றம் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.