யாழ் மயானத்தில் சடலத்தின் கீழ் புதையல் தோண்டிய நபர்கள்
யாழ் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பொது மயானத்தில் சடலமொன்று அடக்கப்பட் செய்யப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர், அங்கு ரோர்ச் வெளிச்சத்தை அவதானித்து, அங்கு சென்ற போது இருவரும் சிக்கினர். இராணுவத்தினர் உடனடியாக பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், இருவர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் ஆதிகோவிலடியை சேர்ந்த 48, 55 வயதான இருவர் எனவும் கூறப்படுகின்றது.
சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு கீழே நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அதை எடுத்து தந்தால் பணம் தருவதாகவும் தமக்கு ஒருவர் கூறியதை அடுத்தே தாம் புதையல் தோண்டிய போதிலும் எதுவும் சிக்கவில்லை என அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.