November 21, 2024

மண் காக்க புறப்பட்டார் டக்ளஸ்!

யாழ்ப்பாணத்தில் நடக்கும் மண் கொள்ளையை தடுக்க இராணுவ சோதனை சாவடியென களமிறங்கியுள்ளார் டக்ளஸ்.

அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு  வருகின்ற சட்ட விரோத மணல்  அகழ்வை கட்டுப்படுத்துவற்கு அமைச்சர் டக்ளஸ் நேரடியாக சென்ற கடற்றொழில் அமைச்சர், சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள், பொலிஸார், படைத் தரப்பினர் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.

அப்போதே சட்ட விரோத மணல் அகழ்வு முற்றாக கட்டுப்படுத்தப்பட வேண்டுமாயின், பாதுகாப்பு தரப்பினர் காவலரண்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் எனறு பிரதேச மக்களினால் கோரப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடிய அமைச்சர், அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்ட விரோத மணல் அகழ்வை முழுமையாகக் கட்டுப்படுத்துமாறு தெரிவித்துள்ளாராம்.

இதனிடையே தீவகத்தில் சட்டவிரோத மண் அகழ்வினை மேற்கொண்டு கடல் நீரை கிராமங்களுக்குள் ஓடவிட்டுள்ள இவரது கட்சி உறுப்பினர்களை முதலில் கட்டுப்படுத்த சொல்லுங்கள் . மண்கொள்ளை மகேஸ்வரி நிதியம் ஞாபகம் இருக்கிறதா ?

வடமராட்சி கிழக்கை நாசமாக்கியதை நாம் மறந்துவிடவில்லையென போர்க்கொடி ; தூக்கியுள்ளனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.