November 24, 2024

கண்ணிவெடி கண்டறிந்த எலிக்கு தங்கம்!

கம்போடியாவில் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து தங்கப்பதக்கம் வென்ற எலி பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது.

மகாவா (MAGAWA) என்ற இந்த எலி 7 ஆண்டுகளாக கண்ணி வெடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இதுவரை 39 கண்ணி வெடிகளையும், 28 வெடிக்காத குண்டுகளையும் கண்டுபிடித்துள்ளது. மகாவா வீடுகளில் வயல்களில் காணப்படும் எலி அல்ல. ஆபிரிக்காவைச் சேர்ந்த பெரிய ரக எலிகள்.
உலகெங்கும் சுமார் 80 மில்லியன் வெடிக்கக்கூடிய கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் PDSA அறநிறுவனம் தெரிவித்தது. கம்போடியாவில் மட்டும் 4 முதல் 6 மில்லியன் கண்ணிவெடிகள் உள்ளன. அவற்றுள் 3 மில்லியன் கண்ணிவெடிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கம்போடியாவில் மாகாவா செய்யும் உயிர்காக்கும் சேவையை அங்கீகரிக்கும் வகையில், பிரிட்டனைச் சேர்ந்த கால்நடைகளுக்கான அறநிறுவனம், கடந்த ஆண்டு எலிக்கு தங்கப் பதக்கம் வழங்கியது.
மகாவா எலி, எடை குறைவாக இருப்பதால், கண்ணிவெடிகள் இருக்கும் இடத்தை அதனால் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்க முடியும். கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதற்காக அவற்றுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.
மகாவா எலி 7 ஆண்டுகளாக கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் அதற்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது