März 28, 2025

மண் சரிவு! 17 வயது பெண்ணின் சடலம் மீட்பு!

இரத்தினபுரி மாவட்டதில் தும்பர இஹலபொல பகுதியில் அடை மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளார்கள்.இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்தத முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, எல்லே ஆலயத்திற்கு அருகில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த இருவரில் ஒருவரின் சடலம் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

17 வயதுடைய யுவதி ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல்போன மற்றைய நபரை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.