März 28, 2025

சங்கிலியனிற்கு சலூட்!

யாழ்ப்பாணச் சைவத்தமிழ்ப் பேரரசின் கடைசி மன்னன் இரண்டாம் சங்கிலியனின் 402 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை(03) கிளிநொச்சி செல்வாநகர் ஓம்சக்திவேல் முருகன் ஆலயத்தில் நினைவு நீத்தார் கடன் வழிபாடு கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் சங்கிலியனின் நினைவாக மேற்படி ஆலய முன்றலில் நிழல்தரு மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வை சிவதொண்டர் மோகன்தாஸ் முன்னின்று நடாத்தியிருந்தார்.