März 28, 2025

ஒலிம்பிக் போட்டி; ஸ்பெய்னின் கரோலினா மரின் விலகல்

ஒலிம்பிக் போட்டி; ஸ்பெய்னின் கரோலினா மரின் விலகல்

ஸ்பெய்னின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான Carolina Marin (கரோலினா மரின்) Tokyo ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

மூன்று முறை உலகச் சாம்பியன் பட்டதை வென்றருவமான 27 வயதுடைய Carolina marin கடந்த முறை பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்துவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

இம்முறையும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்க வெற்றி வாய்ப்பு அவருக்கு பிரகாசமாக இருந்தது. எனினும் தமது இடது காலின் முட்டியின் தசைநார் கிழிந்திருப்பதால் கனத்த இதயத்தோடு ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக carolina marin அறிவித்துள்ளார்.