சூரிச் சைவத் தமிழ்ச் சங்கம் களமிறங்கியது!
வடக்கில் தன்னார்வமாக வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு உதவி செய்ய யற்சி செய்யும் தன்னார்வத் தொண்டர்களுக்கு தடை போடுவதில் அதிகாரிகள் முனைப்பு காட்டிவருவதான குற்றச்சாட்டுக்களில் புலம்பெயர் ஆலயங்கள் முன்மாதிரியாக மீண்டும் களமிறங்கியுள்ளன.
நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கான போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு பிரதேச செயலகம் உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள் அக்கறை காட்டாமல் அசமந்த போக்காக இருக்கின்றார்கள் என குற்றச்சாட்டுக்கள் மத்தியில் சுவிஸ் சூரிச் அன்பேசிவம் அமைப்பு தனது உதவி பணிகளை ஆரம்பித்துள்ளது.
இடர்காலத்தில் முன்னெடுக்கும் „யாவர்கும் ஆம் உண்ணும்போது ஓர் கை பிடி“ எனும் திட்டத்தின் கீழ் சைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஊடாக சுவிஸ் நாட்டை சேர்ந்த மனிதநேய கொடையாளர் கணேசலிங்கம்(ராதா) அவர்களினால் 150 குடும்பகளிற்கான உலர் உணவு பொதிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.
முதலாவது தொகுதி பொதிகள் இன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இருட்டுமடு கிராமத்தில் குடும்பங்களிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிற்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.