November 24, 2024

ஜீன் 14 வரை இலங்கையில் நீடிப்பு!

இலங்கையில் அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 14 ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டதை கொவிட் -19 ஐ கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.

தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்படுமென பரவலாக தெரிவிக்கப்படுகின்றது. இன்னும் சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் அவ்வாறே செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதனால், மக்களிடத்தில் ஒருவகையான அச்ச உணர்வு சூழ்கொண்டுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்குப் பின்னர், மே 21ஆம் திகதியன்று அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மே 25ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு, அன்றிரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மே 31ஆம் திகதியும் ஜூன் 4ஆம் திகதியும் அவ்வாறே தளர்த்தப்பட்டு, ஜூன் 7ஆம் திகதி வரையிலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்து.

எனினும், மே. 28ஆம் திகதியன்று விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பில், மே.31 மற்றும் ஜூன் 4ஆம் திகதிய தளர்வுகள் இரத்துச் செய்யப்பட்டு, பயணக்கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டமை தெரிந்ததே.

எனினும் ஜனாதிபதியே நீடிப்பு தொடர்பில் முடிவினை எடுப்பார் என முன்னதாக சவேந்திரசில்வா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.