November 22, 2024

மட்டக்களப்பில் ஆடை தொழிற்சாலை மூடல்!

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நூற்றுக்கும் அதிகமாக உயர்வடைந்துவருவதாக மாவட்ட செயலர்; கே. கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மட்டக்களப்பு – ஆரையம்பதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக ஒரு வாத்திற்கு மூடுவதற்கான முடிவை ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் எடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தாளங்குடாவில் இயங்கிவரும் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 3000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றிவரும் நிலையில் கடந்த சில தினங்களாக இத்தொழிறசாலையில் கடமை புரியும் ஊழியர்களிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.

நேற்று 71 தொற்றாளர்கள் இத்தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்டதையடுத்து தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு ஆடைத்தொழிற்சாலையை மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக பணிப்பாளர்; தெரிவித்துள்ளார்.