November 22, 2024

திசையை மாற்றுகின்றது கோத்தா அரசு!

கோத்தபாய அரசின் மீதான சுற்றுச்சுழல் ழிப்பு குற்றச்சாட்டுக்களை தவிர்க்க கப்பல் விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளது.

சவேந்திர சில்வாவின் விசேட ஆலோசனைக்கமையின்படி, விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியான கழிவுகளை அகற்ற 300 இராணுவத்தினர் நீர்கொழும்பு கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் தீவிபத்திற்குள்ளாகியுள்ள கப்பலிலிருந்து பெருமளவான பொருட்கள் கடலில் விழுந்து கரையொதுங்கியுள்ளன. இந்நிலையில், இராணுவத்தினை ஈடுபடுத்தி அவற்றை அப்புறப்படுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் இராணுவத்தின் பீரங்கி படை, வெடி குண்டு அகற்றும் படை மற்றும் ட்ரோன் படை உள்ளிட்டவை ஈடுபட்டிருந்ததாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்தது.

எனினும் அரசியல்வாதிகள் நீலிக்கண்ணீர் வடிப்பதாக முன்னணி கேலிப்பட சித்திரகாரர்கள் போட்டுத்தாக்கியுள்ளனர்.