November 22, 2024

கொரோனா தொற்றாளர் சொத்துக்களை பாதுகாக்க திட்டம்!

யாழ்.மாவட்டத்தில் சகல குடும்ப அங்கத்தவர்களையும் மருத்துவமனையில் அனுமதிக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களது வீட்டினைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்களுடன் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரின் இணையவழி கலந்துரையாடலிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிராமிய குழுக்களை உருவாக்கி அதனை வலுவூட்டல் , மததலைவர்கள் , பொலிஸார் . சிவில் பாதுகாப்பு அதிகாரி , இளைஞர் சேவைமன்ற அங்கத்தவர்களை உள்ளீர்த்தல் .

தனிமைப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் உணவுப் பொருட்களைப் பெற முடியாத குடும்பங்களுக்கு உணவுகளை வழங்குவதற்காக திட்டமொன்றைத் தயாரித்தல் .

தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராமத்தினுள் மின்சாரம் , குடிநீர் , துப்புரவேற்பாட்டு வசதிகள் முறையாக உள்ளதா என கண்டறிவதற்காக பொறுப்புக்களை வழங்குதல்

கிராமத்திலுள்ள கொரோனா நோயாளிகள் , அவர்களுடன் தொடர்புபட்டோர் தொடர்பாக அதிக கவனத்தைச் செலுத்துதல் .

கிராமத்திலுள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பொருட்களை வீடுகளுக்கே எடுத்துச் சென்று கொடுக்கும் வேலைத்திட்டமொன்றைத் தயாரித்து செயற்படுத்துதல் வேண்டும்

நோய் நிலைமை மோசமடையும் நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக சுகாதாரப் பாதுகாப்பு முறைப்படி காப்பிடல்.

திருமணம் , இறுதிச் சடங்குகள் , சமய நிகழ்வுகள் போன்ற சகல வைபவங்களும் சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப நடாத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்தல் .

கிராம உத்தியோகத்தர் உட்பட கிராமத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களும் பிரதேச செயலரின் வழிகாட்டலின் கீழ் ஒருங்கிணைப்பு அலுவல்களை மேற்கொள்ளுதல் .

விவசாயம் , சுயதொழில்கள் உட்பட பல்வேறுபட்ட தொழில்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை வழங்குதல் .

ஒரு கிராமம் பயணக்கட்டுப்பாடு அல்லது தனிமைபடுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் உணவு பெற்றுக்கொள்ள முடியாத குடும்பங்களுக்கு அரச உத்தியோகத்தர்கள் . நன்கொடையாளர்களுடன் இணைந்து பொருத்தமான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல் என்பவை தொடர்பில் முடிவெய்தப்பட்டுள்ளது.