வீணாகும் விளைச்சல்:வன்னியில் நெருக்கடி!
வடபுலத்தில் ஒருபுறம் கொரோனா விவசாயிகளை வாட்டிவர மற்றொருபுறம் புயல்காற்றினால் வன்னி சேதங்களை சந்தித்துவருகின்றது.
தற்போதைய கொரோனா முடக்கத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் 100 கொடித்தோடை விவசாயிகள் பாதிப்புபிற்குள்ளாகியிருப்பதாகவும் 50 ஆயிரம் கிலோ கொடித்தோடை காய்களை சந்தைப்படுத்த முடியவில்லையெனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் வன்னியில் பலத்த புயல்காற்றினால் பப்பாசி பயிர்கள் மற்றும் வாழழைகள் அழிந்துள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக பழச்சாறுக்கு தொழிற்சாலைகள் வன்னிக்கு உட்புக தடை விதிக்கப்பட்டுள்ளமையாலேயே இத்தகைய நெருக்கடி தோன்றியுள்ளது.
விளைச்சலை சந்தைப்படுத்த முடியாது மரங்களுடனேயே கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.