உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் இவர்தான்
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெயர்கள் கடந்த ஒரு வருடமாகப் பெரிய அளவிலான மாற்றங்களை கண்டு வருகின்றன. முதலில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் சொத்து மதிப்பு தாறுமாறாக அதிகரித்ததால், மிக குறுகிய நாளில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். ஆனால் அவரை பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவனத்தின் ஜெப் பைசோஸ் முன்னுக்கு வந்தார். ஆனால், இப்போது இவர்கள் இருவரையும் பின்னு தள்ளி விட்டு மூன்றாவது நபர் உலக பணக்காரர் பட்டியலில் சேர்ந்துள்ளார்பிரெஞ்சு ஆடம்பர பொருட்களுகான பிரபல குழுமம் LVMH நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) 186.2 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளதாக, ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
திங்களன்று போர்ப்ஸின் ரியல் டைம் பில்லியனர் தரவரிசைப்படி, அர்னால்ட் அவர்களுக்கு 186.3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்து உள்ளது. அமேசான் (Amazon) ஜெப் பெசோஸின் 186 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உடன் ஒப்பிடும்போது, இது 300 மில்லியன் டாலர் அளவிற்கு சொத்து அதிகம் உள்ளது.
டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX )தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் (Elon Musk), ஜெப் பெஸோஸ் ஆகியோரை விட அர்னால்ட் முன்னிலையில் இருக்கிறார், எலான் மஸ்கிற்கு 147.3 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து உள்ளதாக ஃபோர்ப்ஸ் மேலும் கூறியது.
உலக வர்த்தகம், தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, வர்த்தக நிறுவங்களுக்கு சேவை அளித்து வரும் கன்பேரிசன் என்ற நிறுவனம், உலகின் வளர்ந்த நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், வர்த்தகம் நடவடிக்கைகள் அதிகரித்து, வேலைவாய்ப்புகளும் பெருகத் தொடங்கியுள்ள நிலையில், ஆடம்பர சந்தையின் வர்த்தகமும் அதிகரித்துள்ளது என கூறியுள்ளது. இதன் மூலம் பல ஆடம்பர பிராண்டுகளை வைத்திருக்கும் லூயிஸ் உய்ட்டன் (LVMH) நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரித்ததுள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அமேசான் நிறுவனர் 2026 ஆம் ஆண்டிலேயே உலகின் முதல் டிரில்லியனராக மாறக்கூடும் என்றும், அந்த நேரத்தில் அவருக்கு 62 வயது இருக்கும் என்றும் அந்த ஆய்வு மேலும் கூறியுள்ளது.