März 29, 2025

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தனியே சந்தித்துப் பேச்சு நடத்தினார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தனியே சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை நேற்று அவர் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார்.

தப்புல டி லிவேராவின் சேவையைப் பாராட்டிய ஜனாதிபதி, அவரது ஓய்வு வாழ்க்கைக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தப்புல டி லிவேரா, இலங்கையின் 47ஆவது சட்டமா அதிபர் ஆவார்.

பதில் சொலிஸிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் புதிய சட்டமா அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது.