அதிஸ்டவசமாக தப்பிய வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.


காணாமல் ஆக்கப்பட்டதமது உறவுகளின் உண்மை நிலையினை வலியுறுத்தி வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1557நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
குறித்த போராட்டம் இடம்பெற்றுவரும் பகுதியில் உள்ள பழமையான மரத்தின் கிளையே கடுமையான காற்றினால் இன்று முறிந்துவிழுந்துள்ளது.
குறித்த நேரத்தில் போராட்டப்பந்தலில் தாய்மார்கள் சிலர் இருந்த நிலையில் அதிஸ்டவசமாக எவருக்கும் சேதங்கள் ஏற்ப்படவில்லை.