ஐரோப்பிய வான்வெளியைப் பயன்படுத்த பெலரூசுக்குத் தடை! ஐரோப்பிய தலைவர்கள் ஒப்புதல்!
றையன் எயர் விமானம் திசை திருப்பப்பட்டு பெலரூசில் தரையிறக்கப்பட்டு அதிலிருந்து எதிர்க்கட்சி ஆதரவு ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வினையை வெளிப்படுத்தியுள்ளது.27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய வான்வெளி மற்றும் விமான நிலையங்களை பெலரூஸ் நாடு பயன்படுத்துவதற்கான தடை உத்தரவுக்கும் பொருளாதார தடைகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ,இன்று திங்கட்கிழமை பெல்ஜியம் தலைநகர் புரூசல்சில் ஒப்புக் கொண்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கிறீசிலிருந்து லித்துவேனியாவுக்கு பறந்துகொண்டிருந்த ஐரிஷ் கேரியர் றையன் ஏயர் விமானத்தை கடத்தி பெலாரசிய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் முக்கிய விமர்சகரான ரோமன் புரோட்டசெவிச்சை கைது செய்ததாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூறிவருகின்றனர்.
அத்துடன் ஊடகவியலாளர் ரோமன் புரோட்டசெவிச்சையும் அவருடன் கைது செய்யபட்டம சோபியா சபேகாவைவும் உடனடியாக விடுவிக்குமாறு அவர்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.