November 22, 2024

வடக்கிற்கு மாற்றாந்தாய் மனப்பான்மை:இருண்ட யுகமா?

Relatives wearing personal protective equipment (PPE) mourn a man, who died from the coronavirus disease (COVID-19), at a crematorium in New Delhi, India April 21, 2021. REUTERS/Adnan Abidi

இலங்கை அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையினால் வடக்கு மோசமான சூழலை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை, மருத்துவபீடத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு இரசாயனங்கள், உபகரணங்கள் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை கருத்தில் கொண்டு அடுத்துவரும் மூன்று  நாட்களிற்கு சமூகமட்ட பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இணுவிலை தொடர்ந்து யாழ்.சுதுமலை அம்மன் ஆலய பிரதான குருக்கள் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்.

இன்னொருபுறம் யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர் ஒருவருக்கும், பெண் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு சமூக மட்ட பரிசோதனைகளை அதிகரிக்க கோரப்பட்டுள்ளது.